இது குறித்து அவர் கூறுகையில்,12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதமே மூத்த மொழி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாடப் பகுதியில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.
தமிழ் மொழி குறித்த அச்சுப்பிழை திருத்தப்படும் - அமைச்சர் உறுதி - printing will be corrected
சென்னை: 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதமே மூத்த மொழி என அச்சிடப்பட்டிருப்பதை திருத்திக் கொள்வதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உறுதி
இதற்கு முன்பு ஈடிவி செய்தி வெளியீட்டை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எப்படி சகிப்பது இந்த கொடுமையை?. தமிழ் 2,300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சம்ஸ்கிருதமோ 4,000 ஆண்டுகள் பழமை யானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழ்நாடு அரசின் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம். இது தமிழ்நாடு அரசா அல்லது சம்ஸ்கிருத சர்க்காரா?” என பதிவிட்டிருந்தார்.