சென்னை:தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும்அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்திற்கான பாடங்களை நடத்தி தேர்வுகள் நடத்த வேண்டும்.
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் - சென்னை
அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனி தமிழ் மொழி தேர்வு கட்டாயம்!!
இதற்குரிய பாடத்திட்டத்தினை சேர்க்க வேண்டும். சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்த தகவலை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் இந்த சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்... கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்...