தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Spiritual trainer Annapoorani: 'நான் சாமியே இல்லை' - திடீர் ட்விஸ்ட் அடித்த அன்னபூரணி - அவதூறு பரப்புவதாக காவல் ஆணையரிடம் புகார் மனு

Spiritual trainer Annapoorani: ஆதிபராசக்தியின் அவதாரம் என தான் கூறவில்லை, தனது ஆன்மிகத்தை உணர்ந்தவர்கள் தான் கூறுவதாக அன்னபூரணி அரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Tamil fraud lady priest complaint commissioner office  Chennai commissioner office interview  ஆன்மிக பயிற்சியாள்ர் அன்னபூரணி  அவதூறு பரப்புவதாக காவல் ஆணையரிடம் புகார் மனு  உணர்ந்தால் உண்மை புரியும் பெண் சாமியார் அன்னபூரணி
ஆன்மிக பயிற்சியாள்ர் அன்னபூரணி

By

Published : Dec 29, 2021, 6:35 PM IST

Updated : Dec 29, 2021, 7:28 PM IST

சென்னை:Spiritual trainer Annapoorani: சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பெண் சாமியாரான அன்னபூரணி அரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்துப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும், செங்கல்பட்டு பகுதியில் ஆன்மிகப் பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து 24ஆம் தேதி பல யூ-ட்யூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் தன்னைப் பற்றியும் தனது ஆன்மிக சீடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ பரப்பி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

கணவர் மரணத்தை சந்தேகிப்பதாகப் புகார்

மேலும் தனது கணவர் மாரடைப்பால் இறந்ததை சந்தேக மரணம் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், ஆன்மிக சேவையில் ஈடுபடக்கூடாது என தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கும், தனது சீடர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை இருப்பதாலும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்னபூரணி அரசு, சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தன் மீது அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், இது குறித்து புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். போலி சாமியார் என சிலர் பொய்யாகக் கூறி வருவதாகவும், ஆன்மிகப் பணி செய்வதற்காக வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உணர்ந்தால் உண்மை புரியும்

ஆன்மிகப் பயிற்சியாளர் அன்னபூரணி

பார்ப்பவர்களுக்குத் தன்னைப் பற்றி தெரியாது எனவும், உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தன்னை பற்றி தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாமியார் என தான் ஒரு போதும் கூறவில்லை, ஆன்மிகம் செய்யவே வந்ததாகவும்; தன்னிடம் ஆன்மிகப் பயிற்சி பெற்றவர்கள் தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, எந்த சக்தி இயக்குகிறது என்பதை உணர்த்தும் ஆன்மிகப் பயிற்சி மட்டுமே வழங்கி வருவதாகவும், அருள்வாக்குத் தரவில்லை எனவும் திட்டவட்டமாக மறுப்புத்தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 'ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து செய்வேன். இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும். தர்மம் தான் வெல்லும்' என்றார்.

இதையும் படிங்க:Handloom Expo: சிறப்பு கைத்தறிக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட திருக்குறள் அச்சிடப்பட்ட புடவைகள்

Last Updated : Dec 29, 2021, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details