தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம் - WWE-ல் தமிழ் பசங்க - WWE tamil

உலகப்புகழ் பெற்ற WWE குத்துச்சண்டையை நேற்று நேரில் கண்டுகளித்த தமிழர்கள், ஏந்திய பதாகை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Tamil audience in WWE
மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம் - WWE-ல் மதுரை பசங்க

By

Published : Aug 31, 2021, 5:53 PM IST

Updated : Aug 31, 2021, 7:34 PM IST

ஹைதராபாத்:WWE- குத்துச்சண்டைப் போட்டி உலகம் எங்கும் பிரபலமானது. 90ஸ் கிட்ஸ் அண்டர்டேக்கர்க்கு ஏழு உயிரு என்பதை நம்பிய காலம் எல்லாம் உண்டு.

ரேன்டி ஆர்டனின் ஆர்கேஓ (RKO) , ட்ர்பிள் ஹெச்சின் பெடிகிரி(The pedigree), சோக்ஸ் லாம் என ஒவ்வொரு வீரரின் பினிஷிங்கும் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இப்போதும் மனப்பாடமாக இருப்பவை.

அப்படிப்பட்ட WWE-குத்துச்சண்டையை மதுரையை சேர்ந்த இரண்டு பேர் நேரில் சென்று கண்டுகளித்தனர். அப்போது, அவர்கள் 'தமிழன்' என்று பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டை அணிந்திருந்தனர்.

WWE-ல் மதுரை பசங்க

அதுமட்டுமின்றி, "நீங்கள் தாய் மொழியில் பேசுகீறிர்கள். நாங்கள் மொழிகளின் தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இப்படிக்கு தமிழர்கள்" என எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அந்தப் பதாகையில், மதுரை பசங்க, #Webelongstotamilstock" என்றும் எழுதப்பட்டிருந்தது.

WWE-ல் மதுரை பசங்க

அயல் நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை காண செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தமிழில் பதாகைகளை ஏந்துவது அவ்வப்போது நடக்கும். ஆனால், WWE-ல் முதல்முறையாக தமிழில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று கெத்துகாட்டிய தமிழன் மாரியப்பன்!

Last Updated : Aug 31, 2021, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details