மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்திவருபவர் மோகன். தேசிய ஊரடங்கால் சிரமப்பட்டுவரும் ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு தனது மகளின் மேற்படிப்புக்காகப் பல ஆண்டுகளாகச் சிறுக சிறுக சேர்த்து, சேமித்துவைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.
இவரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமல்லாது இந்தச் செய்தி தமிழ்நாடு முழுவதும் வைரலாகப் பரவியது. தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், மோகன் மகளின் ஓராண்டு கல்விச் செலவை ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபன் கூறுகையில், "இந்தச் செய்தி என்னைப் பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் மோகனிடமும் அவரது மகள் நேத்ராவிடமும் பேசி எனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் மன நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்.