தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையை இணைக்கும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி - tambaram traffic

சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்  பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

பெருங்களத்தூர்,போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர்,போக்குவரத்து நெரிசல்

By

Published : Jan 20, 2020, 2:51 PM IST

பொங்கல் திருநாள் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளும் கார்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை திரும்பிய பயணிகளுக்கு போதிய உள்ளூர் போக்குவரத்து வசதி இல்லாததால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல்

மேலும், வண்டலூர் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அதிகபடியான போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகம், கல்லூரிக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி - இஸ்லாமிய சகோதரர்களின் மகத்துவம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details