சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், சேலையூர், சிட்லபாக்கம், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.