சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதியிலிருந்து பெரும்பாலானோர் நேற்று மாலை முதல் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட ஆரம்பித்துள்ளனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம் - தாம்பரம்
தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துவருவதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்
இருப்பினும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த விமான டிக்கெட்.. குறையாத விமான பயணிகள் கூட்டம்