நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பரவிவருவதையடுத்து, இந்தத் தீநுண்மி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. அதுமட்டுமின்றி சமூகச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் நெடுஞ்சாலைகளில் கரோனா தீநுண்மி ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் தன்னார்வலர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் களப் பணிகளை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.