சென்னை:கண்ணகி நகரில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் அம்பேத்கர் இரவு பாட சாலையில் பயின்று வருகின்றனர். இங்கு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு பயிலும் ராஜலட்சுமி, எலிஷா, ரோஷினி, சஞ்சய், சந்தியா உள்ளிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி நேபாளம் நாட்டில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தப் போட்டிக்கு செல்லவிருக்கும் மாணவ- மாணவிகளுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்கள் சிலம்ப திறமையினை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ரவி, "கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடியல், வெளிச்சம், உதயம் திட்டங்கள் கொண்டு வரப்படும். அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்" என்றார்.