தமிழ்நாடு

tamil nadu

ECR-ல் பைக் ரேஸ் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை

By

Published : Apr 23, 2022, 12:50 PM IST

கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

ECR-ல் பைக் ரேஸ் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை.. வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும் - தாம்பரம் கமிஷனர் எச்சரிக்கை
ECR-ல் பைக் ரேஸ் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை.. வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும் - தாம்பரம் கமிஷனர் எச்சரிக்கை

சென்னைகிழக்கு கடற்கரைச் சாலை உதண்டி சுங்கச்சாவடியில் குளோபல் மருத்துவமனையும் தாம்பரம் காவல் ஆணையகமும் இணைந்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காவல் தாம்பரம் ஆணையர் ரவி, "வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்களையும் தலைக்கவசம் அணியாதவர்களையும் நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம், அது மட்டுமின்றி முதலில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், சனி, ஞாயிறு கிழமைகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளில் செல்பவர்களுக்கு நீலாங்கரை முதல் கோவளம் வரை தனியாக டிராக் அமைத்துப் பாதுகாப்பு அளிப்பதாக கூறினார். மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பைக் ரேஸ் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் குளோபல் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details