சென்னை, கிழக்கு தாம்பரத்தில் கார்லி சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பள்ளி வளாகத்தில் வாக்காளர் சரிபார்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில் தேவாலயத்தின் வெளியே இருந்த பைபிள் வைக்கபட்டிருந்த கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவாலய நிர்வாகிகள் சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.