சென்னை:தாம்பரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியில் கடந்த 10 வருடங்களாக இரண்டு மகன், ஒரு மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மகன்களும் தாம்பரம் பகுதியில் வேலை செய்து வருகிறார்கள். 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது காதலன் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண் காதலனிடம் கேட்டு இருக்கிறார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துவந்த கல்லூரி மாணவி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.