தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம்: துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவன் உயிரிழப்பு! - துப்பாக்கி சுட்டு உயிரிழந்த மாணவன்

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்ட மாணவன்

By

Published : Nov 5, 2019, 2:45 PM IST

Updated : Nov 5, 2019, 4:21 PM IST

சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று முகேஷ் வீட்டிற்குச் சென்ற விஜய் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முகேஷின் நெற்றிப் பொட்டில் சுட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த மாணவன்

இதில் படுகாயமடைந்த முகேஷ் உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது முகேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மேலும், இது குறித்து விஜய்யின் நண்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க :வேலூரில் முதியவர் மீது சுப்பாக்கிச் சூடு - போலீஸ் விசாரணை

Last Updated : Nov 5, 2019, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details