எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உமர் பரூக் என்பவர் தாக்கல்செய்த மனுவில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உறுதிசெய்தது. அதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி ஓமனிலிருந்து காஞ்சிபுரம் வந்த நபருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் "மக்கள் ஊரடங்கு" பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மத நிகழ்ச்சிகள் நடத்த அப்போது தடைவிதிக்கப்படவில்லை. அதன்படி, டெல்லி நிஜாமுதீனில் நடத்தப்படும் சமயக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிப் பெற்று நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனால் சமயக் கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேர் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே இருந்தனர். அதனால் காவல் துறையினர் அவர்களை வெளியேற்ற முயற்சித்தனர். அதில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிலருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சமயக் கூட்டத்தை நடத்திய நிர்வாகத்தினர் மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.