சென்னை வண்டலூர் அருகே உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருந்த அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், தன்னை கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாகவும், தனது சான்றிதழ்களை மருத்துவமனை நிர்வாகம் திருப்பித் தர மறுப்பதாகவும், தனக்கு பாலியல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீது பேராசிரியை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலரைச் சந்தித்து தனக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியும், அங்கு உள்ள தனது சான்றிதழ்களையும், உடமைகளையும் மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க... ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவக் கல்லூரி மாணவர்கள்: விடுதியில் தங்க அனுமதி