கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் சந்தித்துவரும் பாதிப்பை குறைத்து, அவர்களுக்கு உதவும் வகையில் உழவுக்கு இலவச டிராக்டர் வழங்கும் jfarm திட்டத்தினை டஃபே நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக நடவு பணிக்கு டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.