தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துக்ளக் குருமூர்த்தியை சிறையில் அடைக்க வேண்டும் - இந்திய தேசிய லீக்

சென்னை: உச்ச நீதிமன்ற , உயர் நீதிமன்ற நீதிபதிகள் தானாகவே முன்வந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வழக்கை விசாரித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா அப்துல் ரஹிம் வலியுறுத்தியுள்ளார்.

Tada Rahim issued condemn statement against Gurumurty for his speech in Tuklaq function
Tada Rahim issued condemn statement against Gurumurty for his speech in Tuklaq function

By

Published : Jan 17, 2021, 11:59 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 14ஆம் தேதியன்று துக்ளக் பொன்விழா ஆண்டை முன்னிட்டு துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையில் பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளை தகாத முறையில் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் பல விதமான கிரிமினல் வழக்குகளில் நீதிபதிகள் பலருக்கு தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். உதாரணமாக அப்சல் குரு , யாகூப் மேனன் உட்பட பலர் பல ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

அதே போன்று சிவில் வழக்குகளில் பலவிதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கிய போதிலும் ஒருவருக்கு பாதிப்பு வந்தாலும் பாதிக்கப்பட்டவர் நீதிக்கு கட்டுப்பட்டு நீதிபதிகளின் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் துக்ளக் விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஒரு அரசியல் வாதியின் காலை பிடித்து நீதிபதியானவர்கள். யாரும் திறமையின் அடிப்படையில் நீதிபதியாக நியமிக்கப்படுவது இல்லை. அதனால் நீதியை எதிர்பார்க்க முடியாது என பேசி உள்ளார்.

அவர் நீதிபதிகளை கொச்சைப்படுத்தி பேசியது அனைத்து தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் வந்தது மட்டுமின்றி சமூக வளைய தளங்களில் இன்றுவரை விவாத பொருளாக உள்ளது. ஆகவே நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை உச்சநீதிமன்ற , உயர்நீதிமன்ற நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை உடனே கைது செய்து தேசிய பாதுகாப்பு (NSA) சட்டத்தில் சிறையில் அடைக்க தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அப்போது தான் மக்களுக்கு நீதியின் மீதும் நீதிபதிகள் மீதும் இதுவரை வைத்த நம்பிக்கை தொடரும் இல்லை என்றால் அரசியல் வாதிகளின் கை பாவை என நீதிபதிகளை மக்கள் சாடுவார்கள். நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கவில்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதிபதிகளுக்கு வளையல்கள் போடும் போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details