சென்னை:தமிழக சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.31) பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன், "அதிமுக ஆட்சியில் போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது அந்த பயிற்சி வழங்கப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள், ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவுள்ளது. ஏற்கனவே ஆசிரியர்களுக்கு பல இடர்பாடுகள் உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் மாணவர்களிடம் கருத்துகளை கேட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்பது ஆரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது. கற்றுக் கொடுக்கவே ஆசிரியர்கள் உள்ளனர், மாணவருடைய உடல்நிலையினை விசாரித்து பதிவிடுவதற்கு அல்ல.