தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் வீட்டருகே தீக்குளித்தவரை காப்பாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு - latest chennai news in tami

முதலமைச்சர் வீட்டின் அருகே தீக்குளித்த நபரைச் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றிய காவலர்களை சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

sylendra-babu-praises-the-police-who-saved-the-person-who-set-fire-near-to-cm-house
முதலமைச்சர் வீட்டருகே தீக்குளித்த நபரை காப்பாற்றிய காவலர்களுக்கு சைலேந்திர பாபு பாராட்டு

By

Published : Sep 28, 2021, 8:06 AM IST

சென்னை:தேனாம்பேட்டை செனடாப் சாலையிலுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டின் முன்பு நேற்று (செப். 27) காலை வெற்றிமாறன் (40) என்பவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதலமைச்சர் வீட்டருகே தீக்குளித்த நபரை காப்பாற்றிய காவலர்கள்

40 விழுக்காடு தீக்காயங்களுடன் அவர் அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிமாறனை காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சி தமிழ்நாடு காவல் துறை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தீக்குளித்த வெற்றிமாறனை விரைந்துசென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் லலிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, காவலர்கள் கோபிநாத், ராஜசேகர், கார்த்திக் ஆகியோரைத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:ஸ்டாலின் வீட்டின் முன் ஒருவர் தீக்குளிப்பு

ABOUT THE AUTHOR

...view details