சென்னை:இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் ஒன்றை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதில், நடிகர் பிரசாந்த் ரூபாய் 10 லட்சம் தன்னிடம் பண மோசடி செய்திருப்பதாகக் கூறி, அப்பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் என்பவர், குமுதினி என்ற பெண் பொய்யான புகார் அளித்திருப்பதாகவும் மூன்று முறை, தங்களது வீடு தேடி வந்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.