சென்னை:வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி என்கிற இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்திய லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த சமூக பாதுகாப்பு திட்டத்தில் நிதி வழங்கியுள்ளனர்.
இத்திட்டத்தில் யானைகளுக்கான 'கிரால்' கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு சமையலறை, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் வீடு, யானைகள் குளிப்பதற்கு வசதியாக ஸ்விம்மிங் பூல் மற்றும் தண்ணீர் தெளிப்பான் (shower) மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது.