தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவத் தேர்வு முறைகேடு: மற்றுமொரு மருத்துவக் கல்லூரி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து

சென்னை: மருத்துவத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மற்றுமொரு எஸ்.வி.எஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வு மைய அங்கீகாரத்தை ரத்து செய்து டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Svs medical college

By

Published : Nov 8, 2019, 4:55 PM IST

மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு வருவது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி தேர்வு மையங்களை ரத்து செய்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வு மைய அனுமதியை ரத்து செய்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் உள்ள எஸ்விஎஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்எம்எஸ் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வுகள் பல்கலைக்கழக தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை ஏற்று ரத்து செய்யப்படுகிறது. அவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாது. அவர்கள் 2019 அக்டோபர் மாதம் நடைபெறும் செய்முறை தேர்விலும் பங்குபெற முடியாது.

மேலும் 5 தேர்வர்களும் பல்கலைக்கழகம் அறிவிக்கும் பொது தேர்வு மையத்தில் அடுத்த பருவத்தில் தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர். இந்தக் கல்லூரியில் தேர்வு மையத்திற்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இதன் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கால்நடைகளுக்கான இலவச மருத்துவ சேவை எண் '1962' - கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details