தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் பணிக்கு வந்த தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி! - news today

சென்னை: இடைநீக்கம் செய்யப்பட்ட தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி மீண்டும் பணியில் சேர்ந்தார்.

Police Inspector
காவல் ஆய்வாளர்

By

Published : May 6, 2021, 8:28 PM IST

கடந்த மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாததை கவனிக்காமல் இருந்ததாகக் கூறி, தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை இடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் இன்று (மே.6) மீண்டும் பணிக்கு காவல் ஆய்வாளர் முரளி சேர்ந்தார். சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் மீண்டும் பணிக்குச் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் முரளிதரன் வாகனம் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details