சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, காணொலி காட்சி மூலம், முதலமைச்சர் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், ஊரடங்கு உத்தரவின் காரணமாக அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பணிகளை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி கீழடி பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதன் அருகில் உள்ள அகரம் மற்றும் மணலூர் ஆகிய கிராமங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கொந்தகை கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கயிருக்கின்றன.
நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு - Suspended excavation works
சென்னை: நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அகழாய்வு பணிகள் தொடங்கம்
அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் 30 பேருக்கும், தொல்லியல் துறை சார்பாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வுப் பணிகள்!
TAGGED:
Suspended excavation works