தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா - வைரலாகும் வீடியோ! - surya jyothika

சூரரைப் போற்று படத்திற்காக பெற்ற விருதை நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுடன் பிரித்து பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா
சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா

By

Published : Sep 5, 2021, 5:54 PM IST

சென்னை:சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து அமேசான் ஓடிடியில் வெளியான படம் சூரரைப் போற்று. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது.

படம் ஓடிடியில் வெளியானபோதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இப்படத்தை சூர்யாவின் 2டி (2d) நிறுவனம் தயாரித்திருந்தது.

பல விருதுகளைக் குவிக்கும் சூரரைப் போற்று

இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம், சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா

வீடியோ வைரல்

கரோனா காரணமாக ஆன்லைனில் விழா நடைபெற்றது. இதையடுத்து இந்த விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருதை நடிகர் சூர்யா, அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பிரித்துப் பார்க்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஜோதிகா, தனது கணவர் விருது பெற்றதற்கு மகிழ்ந்து கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். அன்பிற்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த விருது என்று சூர்யா பேசும் ஆடியோவும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் ஜோதிகா - ஆரம்பமே அதகளம்

ABOUT THE AUTHOR

...view details