மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற காப்பான் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 'ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும்னு சிலர் சொன்னார்கள், ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது.சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்துள்ளது, அவர் கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன்' என்றார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த சூர்யா! - NEP
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்த தனது கருத்திற்கு ஆதரவளித்த நடிகர் ரஜினிகாந்திற்கு ட்விட்டரில் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா
இந்நிலையில், தனது கருத்திற்கு ஆதரவளித்த நடிகர் ரஜினிகாந்திற்கு சூர்யா இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
Last Updated : Jul 22, 2019, 7:14 PM IST