தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும்: சூரப்பா கோரிக்கை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: அரசு வீட்டை காலி செய்ய மேலும் 2 மாதம் கால அவகாசம் வேண்டும் என சூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

சூரப்பா கோரிக்கை
சூரப்பா கோரிக்கை

By

Published : Apr 15, 2021, 5:18 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா 2018 ஏப்ரல் 11-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். பின்னர் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான இல்லத்தில் தனது குடும்பத்துடன் அவர் குடியேறினார்.

துணைவேந்தராக சூரப்பா பதவி வகித்த காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை விசாரணை அலுவலராக அரசு நியமனம் செய்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூரப்பாவின் பதவிக்காலம் 2021 ஏப்ரல் 11ஆம் தேதி முடிவடைந்தது.

அப்போது அரசு வீட்டை காலி செய்ய 2 நாள்கள் அவகாசம் வேண்டும் என அவர் கேட்டார். அதற்கு அரசு அனுமதி அளித்தது. தற்போது மேலும் 2 மாதம் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அரசு எந்தவிதமான பதிலும் கூறாமல் உள்ளது.

இதையும் படிங்க: துணைவேந்தர் சூரப்பா நல்லவரா, கெட்டவரா? - விசாரணையில் தெரியும்

ABOUT THE AUTHOR

...view details