வயதான பெண்மணி ஒருவர் சுவற்றில் இருந்து ஆற்றில் குதித்து மகிழ்ந்த வீடியோ ஒன்றை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆற்றில் குதித்த பெண்மணி; துணிச்சலை பாராட்டிய சுப்ரியா சாஹூ - Supriya Sahu praised
வயதான பெண்மணி ஒருவர் தாமிரபரணி ஆற்றில் குதித்து மகிழ்ந்த வீடியோவை பதிவிட்டு சுப்ரியா சாஹூ அவரது துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
ஆற்றில் குதித்த பெண்மணி; துணிச்சலை பாராட்டிய சுப்ரியா சாஹூ
அவரது அந்தப் பதிவில், ’தமிழ்நாட்டின் கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி நதியில் இந்த புடவை அணிந்த மூத்த பெண் சிரமமின்றி குதிப்பதைப் பார்த்து வியந்தேன். இது வழக்கமாக நடப்பது என்றும்; அவர்கள் அதில் வல்லவர்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை நண்பர் ஒருவர் எனக்கு பகிர்ந்தார். இந்த காணொலி மிகவும் ஊக்கமளிக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Viral video: உயிருக்கு போராடிய குழந்தை...ஆம்புலன்ஸூக்கு வழிவிடாத கார்...