தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை சென்னையிலே விசாரிக்கலாம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு - Supreme Court

ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

supreme-court-ordered-ig-murugan-sexuall-harrasement-case-to-be-heard-in-chennai
ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை சென்னையிலே விசாரிக்கலாம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 27, 2021, 2:14 PM IST

டெல்லி:பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அந்தப்புகாரின் மீது அப்போதைய அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யயப்பட்டு வந்தநிலையில், தமிழ்நாட்டில் விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்றும் உயர் பதவியில் இருக்கும் முருகன் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் பெண் எஸ்பி தரப்பில் முறையிடப்பட்டது.

பெண் எஸ்பியின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தெலங்கானவுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. கடந்த 23ஆம் தேதி இம்மனு மீதான விசாரணையின்போது, தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை இங்கு நடைபெற்றால் நியாயம் கிடைக்கும் என பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததோடு, வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details