தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் - Perarivalan release issue

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கியுள்ளார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

By

Published : Jan 22, 2021, 1:47 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று, இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை முடிவை தமிழ்நாடு ஆளுநர் 3 அல்லது 4 நாள்களுக்குள் முடிவு செய்வார் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details