தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நஷ்ட ஈடு கோரிய வழக்கு - 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு! - பேனர் விவகாரம்

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

supreme-court
supreme-court

By

Published : Jan 6, 2020, 10:19 PM IST

சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு மற்றும் பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிக்கரணையில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சுபஸ்ரீ உயிரிழப்புக்கான இழப்பீட்டைப் பொறுத்தவரை, அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம், அரசியல் கட்சிகள் சார்பில் 7 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை அளித்துள்ள விண்ணப்பம் பரிசீலினையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சுபஸ்ரீ தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பேனர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் வரும் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி சிறப்பு அலுவலர்களின் பணிக் காலம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details