தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணைக்கலந்தாய்வு அறிவிப்பு - தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாத பி.இ, பி.டெக் படிப்புகளின் காலியிடங்களுக்கான துணைக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Etv Bharatபொறியியல்  கல்லூரிகளில்  நிரப்பபடாத இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு அறிவிப்பு
Etv Bharatபொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடாத இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு அறிவிப்பு

By

Published : Nov 4, 2022, 7:41 PM IST

சென்னை:தமிழ்நாடு பொறியியல் பி.இ., பி.டெக்., சேர்க்கையில் துணைக்கலந்தாய்விற்கு 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு பொறியியல் பி.இ, பி.டெக்., மாணவர் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சிபெற்ற 12ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்ற, தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச்சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்துகொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். மாணவர்கள் துணைக்கலந்தாய்வு , விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரைப் பதிவு செய்யலாம். மாணவர்கள் இணையதள விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:NIWE மத்திய அரசு வேலைவாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details