தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் நெருப்பு வரும்.. ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்! - மூன்று முகம் வசனம்

சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான அலக்ஸ் பாண்டியன் படம், தற்போது மீண்டும் கமலா சினிமாஸ் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்!
ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்!

By

Published : Aug 5, 2023, 10:45 PM IST

சென்னை: திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது கமலா சினிமாஸ்.

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான "மூன்று முகம்" படத்தின் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்ட படத்தை கமலா சினிமாஸ், தற்போது மீண்டும் வெளியிட உள்ளது. இதுகுறித்து கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, "எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அவர் நடித்த பிரம்மாண்ட வெற்றியை குவித்த படங்களுல் ஒன்றான 'மூன்று முகம்' டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்தின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட இப்படத்தை கொண்டாடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 10 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், "மூன்று முகம்" படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:"இதெல்லாம் தலைவருக்கு மட்டும் தான் நடக்கும்"... தனியார் நிறுவன அறிவிப்பால் மார்தட்டி கொள்ளும் ரஜினி ரசிகர்கள்!!

மேலும் இந்த வெளியீட்டை எளிதாக்கி தந்த சத்யா மூவிஸ் தங்கராஜ் அவர்களுக்கும், கமலா சினிமாஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'மூன்று முகம்' நாளை (ஆகஸ்ட் 06), கமலா திரையரங்கில் வெளியாக உள்ளது.

1982ம் ‌ஆண்டு வெளியான இப்படத்தை ஜெகன்னாதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து இருப்பார். குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் என்ற ரஜினியின் நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரம், இன்றுவரை அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக அறியப்படுகிறது. குறிப்பாக அப்படத்தில் ரஜினி பேசிய, "தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் ஒரசினால்தான் தீப்பிடிக்கும்..! ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்..!" என்று ரஜினிக்கே உரிய ஸ்டைலில் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது.

இதையும் படிங்க:சூப்பர் ஸ்டார் ரஜினி தான்; அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - நடிகர் ரோபோ சங்கர்

ABOUT THE AUTHOR

...view details