2003ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் முறையான வருமான வரி செலுத்தவில்லை என நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறைநோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 2002-2003ஆம் நிதியாண்டில் நண்பர்களுக்கு 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகவும், அதற்கான வட்டிக்கு வரி செலுத்துவதாகும் குறிப்பிட்டிருந்தார். 2004-2005ஆம் நிதியாண்டில் ஒரு கோடியே 71 லட்சம் கடன் திரும்பி வராததால் வாராக் கடனாக அறிவித்த ரஜினி, தனக்கு அந்த ஆண்டில் 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடன்களுக்கான பலன்களை பெறுவதற்காக, நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகமடைந்த வருமான வரித் துறையினர், இதுபற்றி 2005இல் ரஜினியிடம் விசாரித்தனர். அப்போது, பொருளை அடமானம் வைத்து பணம் பெறுவதை மட்டுமே வட்டித்தொழில் என்று தான் நினைத்திருந்ததாவும், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடன் வழங்கியதாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகவும் வியாபாரமாகவும் செய்யவில்லை எனநடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்தார். இதை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதையும் படிங்க: கந்துவட்டியிலும் சூப்பர் ஸ்டார்?