தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சூர்யா பேசியது மோடிக்கு கேட்டு விட்டது' - காப்பான் விழாவில் ரஜினி பேச்சு! - மோகன்லால்

சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை ஆமோதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

kaappan

By

Published : Jul 21, 2019, 11:52 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்க வேண்டியது. ஆனால், அதை நான்தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் 'இந்தியன் 2' நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியது மோடிக்கு கேட்டு விட்டது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details