சென்னை:தமிழ்நாட்டில் இன்றைய தினம் 29,976 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்து வருவதால் ஞாயிறு முழுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
வருகின்ற 31ஆம் தேதியுடன் இரவுநேர ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.27) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.