சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் சென்னை புறநகர்ப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தூய்மைப் பணியாளர்கள், மருத்துவம் என அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பால், மருந்துக்கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காவல் துறையினர் ஆங்காங்கே தற்காலிக சோதனைச்சாவடி அமைத்துத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஞாயிறு ஊரடங்கு அமல் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்புகின்றனர். ஊரடங்கு, கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு காவல் துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : Liquor sale in Pollachi: பொள்ளாச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுபான விற்பனை ஜோர்