தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல், மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது - Sun will now move to Sagittarius

தனுசு ராசியில் சூரியன் இன்று (டிசம்பர் 16) வெள்ளிக்கிழமை காலை 9:38 மணிக்கு சஞ்சரிக்கிறார். இதனால் மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து காண்போம்.

தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல்
தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல்

By

Published : Dec 16, 2022, 9:01 AM IST

  • மேஷம்:சூரியன் இப்போது தனுசு ராசிக்குள் நுழைகிறார். எனவே இந்த ஒரு மாதகாலமும் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் தவறவிட்ட பணிகள் யாவும் முடிவடையத் தொடங்கும். மாணவர்களுக்கும் படிப்பில் வெற்றி கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும்.

பரிகாரம்:சூரிய பகவானுக்கு தினமும் குங்குமம் கலந்த தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

  • ரிஷபம்:தனுசு ராசிக்குள் சூரியன் நுழைவதால், ரிஷப ராசிக்காரர்கள் சொத்துவாங்குவது தொடர்பான முடிவுகளை இப்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டும். சட்ட விஷயங்களிலிருந்து கூட விலகி இருப்பது நல்லது. இந்த மாதம் உடல் நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.

  • மிதுனம்:தனுசு ராசிக்குள் சூரியன் நுழைவதால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் தொழில் பார்ட்னருடனான உறவும் சுமூகமாக இருக்காது. அதிக வேலை இருக்கும். நீங்கள் ஒரு பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

பரிகாரம்:தினமும் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.

  • கடகம்:சூரியன் இப்போது தனுசு ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக, உங்களுக்கு இந்த ஒரு மாதகாலமும் நிறைய வேலை இருக்கும். எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். அரசாங்க வேலைகளால் நன்மை அடைவீர்கள். புதிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்:ஆதித்யஹிருதம் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.

  • சிம்மம்: தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சுமாராகவே இருக்கும். காதல் விவகாரங்களுக்கு நேரம் சாதகமின்றி இருக்கும், ஆனால் நீங்கள் சமூகத் துறையில் மரியாதையைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் மந்திரத்தை ஓதுங்கள்.

  • கன்னி:தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு இம்மாதம் முழுவதும் சற்று கடினமாகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்திலும் அதிக வேலை அழுத்தம் இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் சிரமம் ஏற்படும்.

பரிகாரம்: தினமும் சூரிய அஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள்.

  • துலாம்: தனுசு ராசிக்குள் சூரியன் நுழைவது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் பழைய பிரச்சினைகள் யாவும் நீங்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும், மேலும் பல பயணங்களையும் திட்டமிடுவீர்கள். அரசுப்பணிகளில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்: ஏழைகளுக்கு கோதுமையைத் தானமாகக் கொடுங்கள்.

  • விருச்சிகம்:தனுசு ராசிக்குள் சூரியன் நுழைவது இந்த ராசியினருக்கு வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், நீங்கள் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்: காயத்ரி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.

  • தனுசு: சூரியன் தனுசு ராசியான உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் ஈகோவை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும், நீங்கள் மிகவும் உற்சாகமாக செயல்படுவீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் பல பெரிய விஷயங்களையும் மிகவும் எளிதாக செய்வீர்கள்.

பரிகாரம்:சூரிய பகவானின் பன்னிரண்டு நாமங்களையும் பாராயணம் செய்யுங்கள்.

  • மகரம்:தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் செலவுகள் சற்று அதிகரிக்கும். இப்போது பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். உங்களுக்கு உங்கள் தொழில் சார்ந்த துறையில் வேலை கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்து பிறகு சிவனையும் தரிசித்து வாருங்கள்.

  • கும்பம்: சூரியன் தனுசு ராசிக்கு செல்வதால் கும்ப ராசியினர் பெரிதும் பயனடைவார்கள். அரசுத் துறையில் பணிபுரிவதால் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரிகாரம்:தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

  • மீனம்:சூரியன் தனுசு ராசிக்கு செல்வது உங்கள் பதவி உயர்வுக்கு வழிவகுக்கிறது. உங்கள் பயணத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

பரிகாரம்:ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: டிச.16 இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details