தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூசு தட்டப்படும் சொத்துகுவிப்பு வழக்கு: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்! - ஆ ராசா சொத்துகுவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூசு தட்டப்படும் சொத்துகுவிப்பு வழக்கு: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!
தூசு தட்டப்படும் சொத்துகுவிப்பு வழக்கு: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

By

Published : Nov 29, 2022, 6:05 PM IST

சென்னை:திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

ஏழு வருட விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:"வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்களை மூட வேண்டும்" - மேயர் பிரியா பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details