தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாவ் விட்டாச்சு லீவு...' பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு! - பள்ளி கோடை விடுமுறை தேதி

தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே14 முதல் ஜூன் 12ஆம் தேதி வரையில் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள், school students
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை!

By

Published : May 6, 2022, 7:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மே 14 முதல் ஜூன் 12ஆம் தேதி வரையில் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும்.
மேலும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெறுகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!
1 முதல் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்பட்டு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்படும். அதனைத்தொடர்ந்து மே 14 முதல் ஜூன் 12ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
2022-23ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு, ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனோ

ABOUT THE AUTHOR

...view details