சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகிலுள்ள செல்போன் டவர் மீது நேற்று (மார்ச் 11) 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார். தகவலறிந்து பெரியமேடு போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அந்த நபர் கீழே இறங்கினார். இதுகுறித்து காவல்துறை தரப்பில், டவர் மீது ஏறியவர் பெயர் அந்தோணி. 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இதேபோல செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளி - செண்ட்ரல் ரயில்
சென்னையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இவர். 25 வருடங்களாக சென்னை சென்ட்ரல் பகுதியில் கூலி வேலை செய்துவருகிறார். அவருடன் வேலை செய்யும் சுகுமார் என்பவர் இவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இவர் குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:WATCH: பால் வாங்க சென்ற பெண்ணிடம் செயினைப் பறிக்க முயற்சி