தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற காலநீட்டிப்பு ஆலோசனை! - உணவுத்துறை அமைச்சர் காமராஜர்

சென்னை: சர்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற நாளையுடன் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், காலநீட்டிப்பு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

minister-kamaraj

By

Published : Nov 25, 2019, 7:54 PM IST

பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி தங்களின் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்களைப் பெற்று அதனுடன் ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, வருகிற 26ஆம் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், வட்டார வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கடந்த 19ஆம் தேதி அறிவித்தது.

நாளையுடன் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், இதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் எத்தனை நாட்கள் அவகாசம் அளிப்பது, மொத்தமுள்ள 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 அட்டைகளில் எத்தனை அட்டைகள் இதுவரை அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை அட்டைகள் மாற்றப்பட வேண்டியுள்ளது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details