சென்னை:திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தினக்கூலி தொழிலாளர் சங்கம் சார்பில், வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, செய்யாறு சர்க்கரை ஆலை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், நிதித்துறை முதன்மைச் செயலாளர் டி.உதயசந்திரன், சர்க்கரை ஆணையர் டி.அன்பழகன், விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோரை ஆன்லைன் மூலம் வருகிற 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இதையும் படிங்க:Chennai Crime News: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்.. தாயை ஏமாற்றிய மகன் கைது..