தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரும்பு ஆலையிலிருந்து விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தருக!' - Association leader Ayakannu

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பாக்கித் தொகை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அய்யாகண்ணு பேட்டி

By

Published : Jun 11, 2019, 7:14 PM IST

ரூ.656 கோடி பாக்கி வைத்துள்ள கரும்பு விவசாயிகளுக்குஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து அந்தத் தொகையை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கடலூர் மாவட்டத்தில் இயங்கும் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 மாதங்களுக்கு முன்பு கடலூர், தஞ்சையில் உள்ள கரும்பு விவசாயிகள் சுமார் 14 லட்சம் டன் கரும்புகளை அரவைக்காக கொடுத்துள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட கரும்புக்கு அந்த நிறுவனம் இதுவரை ரூ. 556 கோடி பாக்கி வைத்துள்ளது.

அய்யாக்கண்ணு பேட்டி

இதில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 236 கோடியும், தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 420 கோடியும் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிலுவைத் தொகையை வழங்காமல், தன்னிடம் சொத்தும் ஏதும் இல்லையென்று வங்கி மூலம் தெரிவித்துள்ளார்.

சொத்துகள் அனைத்தையும் அமெரிக்காவில் வைத்துக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவருகிறார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details