சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இருந்து தோகா செல்லும் கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் 274 பயணிகள், 7 விமான ஊழியா்கள் உள்பட 281 பேருடன் இன்று அதிகாலை 3.45 மணிக்கு புறப்படத் தயாரானது.
கத்தார் விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு - பயணிகள் அவதி - The flight departed at 6:45 pm 3 hours late
சென்னை: சென்னையில் இருந்து தோகா செல்லும் 'கத்தாா் ஏா்லைன்ஸ்' விமானம் திடீா் இயந்திரக் கோளாறு காரணமாக மூன்று மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
mechanical-failure-flight
இந்த நிலையில் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியுள்ளார்.
பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாக காலை 6.45 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.