தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரன்வேயில் ஓடிய போது எந்திரக் கோளாறு... விமான விபத்து தவிர்ப்பு.. - Chennai flight

104 நபர்களுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் செல்லும் பொழுது எந்திர கோளாறு கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக விமான நிலையித்திலேயே காத்திருக்கும் பயணிகள்
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக விமான நிலையித்திலேயே காத்திருக்கும் பயணிகள்

By

Published : Jun 3, 2022, 2:12 PM IST

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று(ஜூன் 2) இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 98 பயணிகள் 6, விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது.

அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டார்.பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் இழுவை வாகனம் மூலமாக இழுத்துவரப்பட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அதன்பின்பு விமானப் பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விமானம் இன்று(ஜூன் 3) அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

ஆனால் விமானம் பழுது பார்க்கும் பணி முடியாத காரணத்தால் மீண்டும் இன்று(ஜூன் 3) அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். ஆனால், 4 மணிக்கும் புறப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்து பயணிகள் , தங்கவைக்கப்பட்டிருந்த ஓய்வு அறைகளுக்குள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதன்பின் விமானம் இன்று(ஜூன் 3) பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகா் பயணிகள் பலா், தாங்கள் வீடுகளுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, வெளியே சென்றுவிட்டனா். மற்ற பயணிகள் சென்னை விமானநிலையத்தில் தவித்து கொண்டிருக்கின்றனா்.

சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரமாக தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு விமானியால், தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால், விமானம் விபத்திலிருந்து தப்பித்து 104 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கலைஞரை காணோம்.. அரசு ஆசிரியர்களின் ஆதங்கம்...

ABOUT THE AUTHOR

...view details