சூடான் நாட்டைச் சேர்ந்த பாசில் என்ற பெண், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார். முன்னதாக கேகே நகர், ரத்தினசாமி சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அவர் சென்றபோது, தனது கைப்பையை அங்கேயே தவற விட்டுள்ளார்.
சிகிச்சைக்கு வந்த இடத்தில் ஹேண்ட்பேகை தவறவிட்ட வெளிநாட்டுப் பெண்! - ஹேண்ட்பேகை தவறவிட்ட வெளிநாட்டுப் பெண்
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த பெண் தனது கைப்பையை தவறவிட்ட நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த சூடான் நாட்டு பெண்ணின் கைப்பை
தொடர்ந்து, இதுகுறித்து கேகே நகர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். தனது கைப்பையில் 3,500 சூடான் நாட்டு டாலர்கள், 12 கிராம் பிரேஸ்லெட், திரும்பிச் செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் ஆகியவை இருந்ததாகவும், காவல் துறையினர் தனது கைப்பையை விரைந்து கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்