தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம் - Sudan factory blast - Victims' body bring back to tamilnadu

சென்னை: சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கடலூரைச் சேர்ந்த இளைஞரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

raja sekar
raja sekar

By

Published : Jan 10, 2020, 5:23 PM IST

சூடான் நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள செராமிக் ஆலையில் டிசம்பர் மூன்றாம் தேதி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 18 இந்தியர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், சூடான் தீவிபத்தில் படுகாயமடைந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தவர்கள் கடந்த 14ஆம் தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டது.

சூடான் தீ விபத்தில் இருந்தவரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது

மேலும் இந்த விபத்தில் உயிழந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜசேகர் முருகன் என்பவரது உடல் இன்று சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் உயிரிழந்த ராஜசேகர் முருகன் உடல் சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

ABOUT THE AUTHOR

...view details