சுச்சி லீக்ஸ் மூலம் பிரபலம் அடைந்த சுசித்ரா(39), தனது கணவர் நடிகர் கார்த்திகுமாருடன் விவகாரத்தாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அடையார் காந்தி நகர் பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தனது அக்கா சுசித்ராவை காணவில்லை என திருவான்மியூரில் வசிக்கும் அவரது தங்கை சுஜிதா அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சுசித்ராவின் செல்ஃபோன் எண்ணை வைத்து அவரைத் தேடி வந்தனர். அவரது செல்ஃபோன் எண் தியாகராய நகரில் உள்ள ஒரு விடுதியில் இயங்குவதாக கண்டறிந்த காவலர்கள், அந்த விடுதிக்குச் சென்று அவரை மீட்டனர்.